Freelancer / 2023 நவம்பர் 11 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை 12ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தீபாவளி தினத்தன்று மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று மாலைவரை அமைதி காத்த கலால் திணைக்களம், நுவரெலியா மாவட்ட மதுபானசாலைகளை மாத்திரம் மூடுவதற்கு அனுமதி வழங்கிவிட்டு, பதுளை மாவட்டத்துக்கான அனுமதியை மறுத்தது.
இது குறித்து இன்று காலை ஜனாதிபதியிடம் கவனத்துக்கு கொண்டுசென்ற பின்னர் பதுளை மாவட்ட மதுபானசாலைகளை நாளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கலால் திணைக்களத்துக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதன்படி பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை தவிர்த்து, மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளின், மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை, தீபாவளிப் பண்டிகை தினத்தன்று மூடப்படவுள்ளது என்றார். R
1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025