Editorial / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
எம்பிலிப்பிட்டிய துங்கம நகரிலுள்ள மதுபான நிலையம் ஒன்றை, குட்டிகல நகருக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு, பிரதேச மக்கள் தமது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த மதுபானசாலையை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 18ஆம் திகதி, குட்டிகல நகரின் பிரதான வீதியை மறித்து, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த மதுபானசாலை அமைக்கப்படுவதால், பிரதேச இளைஞர்கள் தீய பழக்கங்களுக்கு உள்ளாகுவர் என்றும் மதுபானம் அருந்துபவர்களால், பிரதேசத்திலுள்ள மக்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago