2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மந்தகதியில் புனரமைப்புப் பணி

Kogilavani   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை-ஹேகொட பாலத்தின் புனரமைப்புப் பணிகள், இடைநடுவில் கைவிடப்படப்பட்டுள்ளதால், பிரதேச மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பாலத்தை புனரமைப்பதற்கு தேவையான நிதிக் கிடைக்கப்பெறாமையே, இதற்குக் காரணமெனெ பதுளை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

நெலும்கம, கலந்தவத்த, ஹேகொட, குட்டியகொல்ல, கெந்தகொல்ல ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தமது போக்குவரத்து தேவைக்காக, இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால், பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள கம்பிகள் உள்ளிட்ட இரும்பிலான பொருட்கள், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இப்பாலத்தின்  புனரமைப்புப்  பணிகள் வெகுவிரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென,  பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .