2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மனித செயற்பாடுகளால் சிங்கராஜ வனம் பாதிப்பு

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இலங்கையின் ஈரவலய வனங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கராஜா வனாந்திரம், மனித செயற்பாடுகளால் அழிவுக்குட்படுத்தப்பட்டு வருவதாக, சுற்றாடலியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இப்பிரதேசத்தில், 1978ஆம் ஆண்டு கட்டாய கமத்தொழில் திட்டத்துக்கிணங்க, சில குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 21 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கைளின் ஈடுபடும் விவசாயிகள், இந்தக் காணிகளின் எல்லையை, சிங்கராஜ வனாந்திரத்தை நோக்கி, சட்டவிரோதமாக விஸ்தரிப்பு செய்து வருவதாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூலிகை மரங்கள், பெறுமதிமிக்க மரங்களை வெட்டி வியாபாரம் செய்யும் நபர்களால் சிங்கராஜா வனாந்தரத்தின் பெரும் பகுதி படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனாந்தரத்தின் பாந்து ராஎல எனும் பிரதான நீரூற்றிலிருந்து பிரிந்து செல்லும் சிற்றாறுகளும், மகுருகந்த, ரேனகந்த வனங்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் இவ்வாறான சமூக விரோதச் செயற்பாடுகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தாலும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .