Janu / 2025 ஜூன் 17 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை மாவட்டம், மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தவின்ன கொங்கஸ்லந்த பகுதியில் தனது மனைவியை சுட்டுக் கொன்ற கணவன் திங்கட்கிழமை (16) அன்று தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய சுனில் திசாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குறித்த நபருக்கு கடந்த 14 ஆம் திகதி மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, மனைவி வீட்டை விட்டு வெளியேறி வீதியில் நடந்து சென்றபோது, அவர் மனைவியின் பின்னால் சென்று அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார். இறந்தவர் ஒரு குழந்தையின் தாயான 38 வயதுடைய எம்.ஜி. நிரோஷா பிரியதர்ஷனி என்பவராவார்.
மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச்சென்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வந்துள்ளதுடன் இதன்போது மனைவியை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பான மரண விசாரணை பிபில நீதவான் மகேஷானி அமுனுகம நடத்தியுள்ளதுடன் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி டபிள்யூ.ஏ.சி. லக்மாலி மேற்கொண்டுள்ளார்.
சுமனசிறி குணதிலக
5 minute ago
21 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
32 minute ago
1 hours ago