2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

Freelancer   / 2025 மார்ச் 22 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை - இரத்தோட்டை, கைகாவல இசுருகம பகுதியில் கணவன் தனது மனைவியை வெட்டிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. 

கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

அவர்களுக்கு இரு பிள்ளைகள் (மகள் 11 - மகன் 13) இருப்பதாக தெரியவந்துள்ளது. 

கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேகநபரான கணவர், இரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X