Janu / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, சனிக்கிழமை (04) மாலை விபத்துக்குள்ளாகவிருந்து மயிரிழையில் தப்பியுள்ளது.
கினிகத்தேனை - தியகலை, கடவலை பகுதியில் இந்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, ஹட்டன் பகுதியில் இருந்து கண்டி நோக்கி வந்த பாரவூர்தி (Lorry) ஒன்றுக்கு இடமளிக்க முயன்றுள்ளது. இதன்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி நின்றது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு இரும்பு வேலி அமைக்கப்படாமல் இருந்திருந்தால், பேருந்து பாரிய பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது.
தெய்வாதீனமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியதாக தியகலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
செ.தி.பெருமாள்

15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago