2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

மரக்குற்றிகளுடன் பார ஊர்தி பள்ளத்தில் கவிழ்ந்தது

Editorial   / 2025 நவம்பர் 11 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ் 

பொகவந்தலாவ- பலாங்கொட பிரதான வீதியின் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் மரக்குற்றிகளை ஏற்றிவந்த பார ஊர்தி   25அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து உள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம், செவ்வாய்க்கிழமை (11)  காலை 10.45மணியவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாரத்தென்ன பகுதியில் இருந்து கம்பளை பகுதிக்கு மரக்குற்றிகளை ஏற்றி சென்ற பார ஊர்தி பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பெற்றோசோ பகுதியில் வளைவு பகுதியில் பார ஊர்தியின் பின்பக்க டயர்  கீழ் இறங்கியதன் காரணமாக விபத்து இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது பார ஊர்தியில் சாரதி மாத்திரம் இருந்ததாகவும் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்பட வில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X