R.Maheshwary / 2022 நவம்பர் 27 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பதுளை- வெவெஸ்த்தை தோட்டம் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர், அவரது மகனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய வாய்பேசமுடியாத மகனே, 60 வயதான சிறிய தந்தையை மரக்கட்டையால் தாக்கியுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (26) மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு, சந்தேகநபரும் நேற்று இரவு பதுளை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இளைஞரின் தந்தை பல வருடங்களுக்கு முன்னரே குறித்த இளைஞரையும் அவரது தாயையும் விட்டு பிரிந்து சென்றுள்ளதுடன், உயிரிழந்த நபர் தாயின் இரண்டாவது கணவர் என்றும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago