2026 ஜனவரி 21, புதன்கிழமை

மரக்கறிகளின் விலை பன்மடங்காக அதிகரிக்கும்?

Kogilavani   / 2021 மே 11 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மறக்கறிகளின் விலை 400 முதல் 500 வரை அதிகரிக்கலாம் என்று, நுவரெலியா விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள விவசாயிகள், அரசாங்கம் இரசாயன உரவகைகளை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்திருக்கின்ற நிலையில்,  ஒரு சில வியாபாரிகள், இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இலாபம் பெற முயற்சிப்பதாகவும் தங்களுடைய வியாபார நிலையங்களில் இரசாயன உரங்களையும் கிருமிநாசினிகளையும் பதுக்கி வைத்திருப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுவரை காலமும் வழங்கப்பட்ட கழிவுத் தொகை வழங்கப்படுவதில்லை எனவும் என்ன விலை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதே விலைக்கே, உரங்களையும் கிருமிநாசினிகளையும் விற்பனை செய்கின்றார்கள் என்றும் இது தொடர்பாக  கேள்வி கேட்டால் வேறு இடங்களில் சென்று பெற்றுக்கொள்ளுங்கள் என்று வியாபாரிகள் விவசாயிகளைக் கடிந்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரசாயன உரவகைகளை தேவையான அளவுக்குப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காரணப்படுவதால்,  ஒரு சில வியாபாரிகள் 50 கிலோ மூடைகளை விற்பனை செய்யாமல் மூடைகளை பிரித்த ஒருவருக்கு 5 கிலோ என்ற அடிப்படையில் விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

50 கிலோ மூடையை  1300 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியம் என்றும் அதனை ஒவ்வொரு கிலோகிராமாக பிரித்து விற்பனை செய்தால், 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என்பதால், கிலோகிராம் கணக்கிலேயே உரங்களை விற்பனைச் செய்வதாகவு் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக அறுவடை மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் இதனால் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் 300 முதல் 400 அல்லது 500 ரூபாய் வரை விலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாகவே விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X