Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கம்பளை - அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த 76 வயதான இராமகிருஷ்ணன் இயற்கை மரணம் எய்திய நிலையில், அவருக்கான இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவிருந்தன.
சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரண வீட்டு வளாகத்தில் இருந்த மரம் மருமகன் மீது முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன. எனவே, அவற்றை அகற்றி, தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
1 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago