Princiya Dixci / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை பி.டபிள்யூ.டீ பிரிவுப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகில் நின்ற ஒரு பழமையான மரம், இன்று வியாழக்கிழமை (07) காலை 8.30க்கு முறிந்து குறித்த கோவில் மீது விழுந்ததில் கோவில் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
குறித்த மரம், மின்கம்பத்தில் விழுந்ததால் பிரதேச மின் விநியோகக் கம்பிகள் வீழ்ந்த நிலையில், அப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் மேற்படி வீழ்ந்த நிலையில் இருந்த மின்கம்பியை, இரண்டு பெண் தொழிலாளர்கள் தெரியாமல் தொட்டதனால் மின்சாரத் தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர்.
ஏனைய தொழிலாளர்களின் உதவியோடு கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இரண்டு பெண் தொழிலாளர்களும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று புதன்கிழமை (06) பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளதாக பிரதேவாசிகள் தெரிவித்தனர்.
அத்தோடு, அப்பகுதியில் இருந்த 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பிரதேச மின் விநியோகக் கம்பிகள் அறுந்து வீழ்ந்தமையால் பிரதேச மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
தடைப்பட்ட மின்சாரத்தை மீளமைக்க ஹட்டன் மின்சார சபையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள, பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago