2025 மே 12, திங்கட்கிழமை

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Freelancer   / 2023 ஜூலை 05 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை  கடும் காற்றுடன் கூடிய மழைக் காரணமாக பிரதான வீதிகளில் பாரிய மரங்களின் கிளைகள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்தவகையில் புதன்கிழமை​ (05) நுவரெலியா நகரில் அமைந்துள்ள ரீகல் சினிமா அரங்கிற்கு அருகில் பாரிய மரம் ஒன்றின் கிளை மின் கம்பம் மீது உடைந்து வீழ்ந்த நிலையில் மின்கம்பம் உடைந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நகரத்திற்கான ஒரு பகுதி மின்சாரம் தடைப்பட்டது.

 

அத்துடன் இவ் வீதியை சீர்செய்யும் வரை இவ் வீதி ஊடாக வாகனங்கள் மற்றும் மக்கள் பயணிக்க நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தடை விதித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X