Janu / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை, லிந்துலை, மெராயா தோட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக, தோட்ட குடியிருப்பு வரிசை மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒரு வீடு கடுமையாக சேதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நாட்களில், நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை மற்றும் லிந்துலை பகுதிகளில் தினமும் பிற்பகல் நேரங்களில் கன மழையுடன் பலத்த காற்று வீசுவதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தோட்ட குடியிருப்புகளுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய யுகெலிப்டஸ் மரம் வீடுகள் மீது விழுந்ததாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீடொன்று பலத்த சேதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ

5 minute ago
21 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
28 minute ago