2026 மே 02, சனிக்கிழமை

மலையக அபிவிருத்திக்கு அமெரிக்கா நிதியுதவி

எம். செல்வராஜா   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு, அமெரிழக்க தேசிய ஜனநாயக நிறுவனம் உதவுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது என, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கும் அமெரிக்க சேதிய ஜனநயாக நிறுவன உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையேயான முக்கியச் சந்திப்பொன்று, சமீபத்தில் இடம்பெற்றது.

கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், மலையக அபிவிருத்தி தொடர்பாக பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, மலையக முன்பள்ளி, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் அபிவிருத்தி தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இதன்படி, இந்தத் துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு நிதி பங்களிப்பு வழங்குவதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது என்றும்  அவர் தெரிவித்தார்.

குறித்த நிறுவனத்தின் அழைப்பின் பேரில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.​அரவிந்தகுமார், கடந்த மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இதன்போது, குறித்த நிறுவன முகாமையாளர்களுடன், பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்தே, சமீபத்திய சந்திப்பின்போதும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .