Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 06 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மலையகத்தில் இளைஞர், யுவதிகளின் சுயத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக பால் உற்பத்தியை அதிகரிப்பது இளைஞர்களின் வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் - கமுகுவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள (ரொத்தர்ஸ் பார்ம்) தனியார் பால் பண்ணைக்கு விஜயம் செய்த அவர், பண்ணை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொடர்பாக பார்வையிட்ட பின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை பரப்புரையில் கீழ் எதிர்காலத்தில் பால் உற்பத்திக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான தூரநோக்குக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
மேலும் மலையகத்திலுள்ள இளைஞர், யுவதிகளின் சுயத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக பால் உற்பத்தியை அதிகரிப்பது இளைஞர்களின் வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி தேசிய நீரோட்டத்திற்கு அதிகளவிலான பால் உற்பத்தியை மேற்கொள்வதற்கும், மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான செயற்திட்டம் இதனூடாக செயல்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025