Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 18 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
“இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களது மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தி, இந்திய அரசு ஆக்கபூர்வ செயற்றிட்டங்களை துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. மக்களின் மேம்பாடுகள் விடயத்தில், இந்திய அரசுக்கு, பூரண பொறுப்புகள் உள்ளன. அந்தப் பொறுப்புகளின் அடிப்படையிலேயே, இந்திய அரசின் வேலைத்திட்டங்கள் அமைந்துள்ளன. அம்மக்களின் மேம்பாட்டுக்காக இந்திய அரசு தொடர்ந்து உதவும்” என்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான ஆலோசகர் டி.சி.மஞ்சுநாத் தெரிவித்தார்.
இந்திய அரசின் நிதியுதவியுடனும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டிலும், பதுளை, லெஜர்வத்தை தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 125 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“இந்திய அரசால் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள், துரிதப்படுத்தப்பட வேண்டுமென்றும், மேலதிக வீடுகள் மலையகத்துக்குத் தேவைப்படுகின்றது என்றும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
“அவரது இந்தக் கோரிக்கையை எமது உயர்ஸ்தானிகரலாயத்துக்கு உடனடியாக அறிவிப்பேன். இவ்விடயத்தில் எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை.
“இந்திய அரசினூடாக, மலையகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்களின் மேம்பாடுகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க என்னாலான அனைத்து உதவிகளையும் மேற்கொள்வேன்” என்றார்.
31 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
44 minute ago