டி. ஷங்கீதன் / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட மக்களின் அவல நிலை தொடர்பிலும் அம்மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் தொடர்பிலும், இந்தியா மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியா- தமிழ் நாட்டு அரசாங்கத்தின் ஊடாக, மலையக மக்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதுத் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேச்சாளராக தான் அழைக்கப்பட்டதாகவும் இதன்போது, மலையக மக்கள் தொடர்பாகவும் அவர்களுடைய நிலை தொடர்பாகவும் தெளிவான விளக்கத்தை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
மலையக மக்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணனிடம், வேண்டுகோள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்ததாகவும் தெரிவித்தார்.
அந்த மகஜரில், “ஐயா தயவுக் கூர்ந்து தங்களுடைய அமைச்சினூடாகவோ அல்லது தமிழ் நாட்டின் அரசினூடாகவோ, தமிழகத்தின் நேரடி உறவுகளான தொப்புள் கொடி வழி வந்த எமது மலையக தமிழ்ச் சமூகத்துக்கு, பின்வரும் உதவிகளை செய்யக்கூடிய இயலுமை காணப்படுமாயின் அதனை பெரும் பேராகக் கருதுகிறோம்” எனத் தெரிவித்தார்.
கல்வி வளங்களைப் பெற்றுக் கொள்தல், மொழித்துறை கல்விக்கும் பண்பாட்டியல் தொடர்பான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும், எமது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல், பல்கலைக்கழகங்களினூடாக பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தல், மலையக மண்ணில் மறைந்து வருகின்ற பாரம்பரிய கலைகளை மீளவும் உயிர்பிப்பதற்கு, எமது சமூகத்தவர்களுக்கு பயிற்ச்சிகளைப் பெற்றுக் கொடுத்தல் (உருமி, பறை, ஒயிலாட்டம், சிலம்பம்,காமன் கூத்து, அர்ச்சுணன் தபசு, பொன்னர் சங்கர் கதை), பண்பாட்டியல் சார்ந்த தமிழ் பாரம்பரியங்களை உள்ளடக்கிய கற்றலுக்கான அல்லது மீள் பதிதலுக்கான வாய்ப்புகளை உருவாக்கி தருதல், மலையக மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் எடுக்குமாறு, மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மகஜரில் கூறப்பட்ட விடயங்களை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஏற்றுக்கொண்டார் என்றும் அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்துரையாடி மிக விரைவில் பதில் தருவதாக தெரிவித்ததாகவும் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜாராம் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago