Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Mayu / 2024 ஜூன் 23 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அதிகளவாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதற்கமைய, நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்கலுக்கிடையில் ரயில் பாதையில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையால் பயணிகள் அசௌகரித்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை (23) கலபடை மற்றும் இங்குருஓயா நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் ரயில் பாதை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ரயில் பாதையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாகவும் மரத்தை அகற்றும் பணியில் புகையிரத ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் பயணம் தாமதமாகலாம் என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவிக்கின்றது.
ரஞ்சித் ராஜபக்க்ஷ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
02 May 2025