2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மலையக வீதிகளில் பனிமூட்டம் ; சாரதிகளுக்கு எச்சரிக்கை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

மலையகத்தில்  இன்று (24) காலை தொடக்கம் மழையுடனான சீரற்ற வானிலை நிலவுவதால், பிரதான வீதிகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் ஹட்டனிலிருந்து கித்துல்கல வரையிலும் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியிலும் பனி மூட்டம் காணப்படுவதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால், சாரதிகளும் பாதசாரிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளதுடன், சாரதிகள் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரவிட்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .