R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
மலையகத்தில் நேற்று (31) திகதி இரவு முதல் கடும் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனால் ஹட்டன்- கொழும்பு மற்றும் ஹட்டன் -நுவரெலியா ஹட்டன் -பொகவந்தலாவை உள்ளிட்ட பல வீதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காசல்ரி, மவுசாக்கலை, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வெகுவாக உயர்ந்து வருகின்றன.
நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சாரதுறை பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவலை,வட்டவளை, ஹட்டன், குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை,ரதல்ல நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் பனிமூட்டம் நிலவுவதாகவும் இதனால் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025