2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

மழை காலங்களில் பாடசாலைக்குள் வெள்ளம்

Sudharshini   / 2016 ஜூன் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட சாமிமலை, கவிரவெல ஆரம்ப பாடசாலை, ஆற்றோரத்தில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில்; பாடசாலை வளாகத்துக்குள் வெள்ளநீர் உட்புகுவதால், பாடசாலை நிருவாகத்தினர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆற்றை ஆழப்படுத்துதல் அல்லது பாடசாலைக்கு அருகில் பாதுகாப்பு மதில் அமைத்தல் ஆகிய நடவடிக்கையின் ஊடகாவே ஆரம்ப பாடசாலை கட்டடத்தை பாதுகாக்க முடியுமென பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்தப்பாடசாலைக்கு விஜயம் செய்த மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், பாடசாலையின் நிலைமைகளை நேரில் கண்டறிந்ததுடன் இவ்விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கும் மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு வந்து, உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக  பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .