2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மழைக்குருவி கூடுகளை கடத்திய இருவர் கைது

R.Maheshwary   / 2022 ஜூன் 16 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா,பாலித ஆரியவன்ஸ

10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மழைக்குருவி ( தகைவிலான் குருவி) கூடுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் இன்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய,  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்ல, தெமோதர மற்றும் பதுளை ரயில் சுரங்களிலிருந்து இரண்டரை கிலோகிராம் நிறையுடைய குறித்த கூடுளை சந்தேகநபர்கள் பெயர்த்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை -பதுளப்பிட்டி பகுதியைச்  சேர்த்த (42) மற்றும் (47) வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த கூடுகளை கொழும்பில் சென்று, சந்தேகநபர்கள் விற்பனை செய்ய திட்டமிட்டு கொழும்புக்கு புறப்பட்ட போது, பதுளை- பதுளுபிட்டிய மைதானத்துக்கு அருகில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குருவிக் கூட்டிலிருந்து பெறப்படும் ஒரு வகைப் பொருளைப் பயன்படுத்தி, செய்யப்படும் சூப் பானம் பாலியல் ரீதியான நோய்களுக்கு சிறந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறித்த குருவிக் கூடுகளை கிலோகிராம் 4 இலட்சம் ரூபாய் வரை ஹோட்டல்களில் கொள்வனவு செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள்  இருவரையும் பதுளை  நீதவான் நீதிமன்றில்  ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X