2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மழையால் பயிர்செய்கை பாதிப்பு

Yuganthini   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்திர விராஜ்

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதென, மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் குசும் செனவிரட்ண தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட விவசாய குழு கூட்டம், இன்று(12) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

மழை காரணமாக, பயிர்நிலங்கள் பல அழிவடைந்துள்ளதெனவும், விதை உற்பத்தி நட​வடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விதை உற்பத்திக்காக பயிரப்பட்ட பெரிய வெங்காயம், குரக்கன், கச்சான், நெல் ஆகியன மழையால் அழிவடைந்துள்ளதென சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் நாட்களில் பயிர்செய்கை மேற்கொள்வதற்காக விதை கொள்வனவு செய்யும் போது விவசாயிகள் பல்​வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .