2025 ஜூலை 19, சனிக்கிழமை

மவுஸாக்கலை நீர்த்தேக்கம் சுத்தப்படுத்தப்படுகிறது

R.Maheshwary   / 2022 ஜனவரி 31 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 மவுஸாகலை நீர்தேக்கத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி நீர்த்தேக்கத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கை இந்த மாதம்  2ஆம் திகதி முதல் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.

மவுஸாகலை நீர்தேக்கத்தின் நீர் பாசன பொறியியலாளர்களால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வாக தற்போது இடைக்கிடையே மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வரும்  நிலைமையை கருத்தில் கொண்டு, மவுஸாகலை நீர் தேக்கத்தில் இருந்து கெனியோன் வரை நீரை கொண்டுச் செல்லும் சுரங்க பாதையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சுரங்க பாதையில் இடைக்கிடையே கழிவுகள் தேங்கியுள்ளதால் அவற்றை அகற்றி சுத்தப்படுத்தும் பணிகளில் மவுஸாகலை நீர்தேக்க நீர் பாசன பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X