Editorial / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா டிசைட் தோட்டம், சாமிமலை ஓயாவிலிருந்து அடையாளங் காணப்படாத நிலையில், ஆணின் சடலத்தை மஸ்கெலியா பொலிஸார் இன்று (14) காலை மீட்டுள்ளனர்.
சடலம் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேற்படிப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற ஒருவர், சடலம் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு வழங்கியத் தகவலுக்கு அமைவாக, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உருக்குழைந்துள்ளது என்றும் நீதவானின் அறிக்கையின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago