Kogilavani / 2021 ஜனவரி 06 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா
'மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும், 25 நாட்கள் வேலை அவசியம்" என வலியுறுத்தி மஸ்கெலியா நகரில், இன்று (6) முற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்துக்கு, மலையக சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தன.
தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை பின்பற்றி நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள், கறுப்புப்பட்டி அணிந்திருந்ததுடன், தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
அத்துடன், தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றுவதற்கு முற்பட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
'மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம் என்ற கோரிக்கை 2015 இல் முன்வைக்கப்பட்டது. தற்போது 6 வருடங்கள் கடந்துள்ளன. இக்காலப்பகுதியில் பொருட்களின் விலை அதிகரித்து, வாழ்க்கைச் சுமையும் அதிகரித்துள்ளது. எனவே, எவ்வித நிபந்தனையுமின்றி அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
'அதேபோல 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கத்தின் காத்திரமான தலையீடுகள் அவசியம்' என்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago