Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
மஸ்கெலியா நகரில், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுதல், விசேட அம்சமாக இருகின்றது என, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். மஸ்கெலியாவில் புதிய பிரதேச சபை அமையவுள்ள நிலையிலேயே, இங்கு மகளிர் தினம் விசேடமானதாக மாறியிருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
மஸ்கெலியாவில் புதிய பிரதேச சபையை உருவாக்குவதற்காக, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, புதிய பிரதேச சபை உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அங்குள்ள 10 வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் வெற்றிபெற்ற பெருமையோடும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் இடம்பெற்ற, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழாவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “அதிகாரப் பரவலாக்கல் பற்றி நாம் பேசி வருகின்றோம். இன்று அது, பெண்களுக்குச் சாத்தியமாகியுள்ளது. மகளிர் தினம் போன்ற கூட்டங்களை நடத்துவது மாத்திரம், பெண்களின் கடமை அல்ல. அதற்கும் அப்பால் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வந்தோம். அதனடிப்படையில், பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களில் அமரக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
"அந்தவகையில், பெண்களுக்கு 25 சதவீதம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், 5 வீதமான சபைகளில் அது சாத்தியமில்லாமல் உள்ளது. ஒரு சபையில் ஆகக் குறைந்தது 3 பெண்கள் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்ட போதிலும், ஆகக் குறைந்தது இரண்டு பெண்களாவது அமரக் கூடிய நிலை உருவாகியுள்ளது. ஏனைய 95 வீதமான சபைகளில், பெண்களின் பிரதிநித்துவம் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
இந்த மாற்றங்கள் காரணமாக, உள்ளூராட்சி மன்றங்களின் பெண்களின் பிரச்சினை பேசப்படுவதில்லை என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், பெண்களின் பிரச்சினைகளை, பெண்களே எடுத்துக் கூறும் நிலை உருவாகியுள்ளது என்றார்.
தொடர்ந்தும், மஸ்கெலியா பிரதேச சபையின் வளர்ச்சிக்குத் தேவையான ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்குவதற்கு, தாம் தயாராகவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago