2025 ஜூலை 16, புதன்கிழமை

மஹோகனி பலகைகளுடன் இருவர் கைது

Kogilavani   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

லொறியொன்றில், சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட மஹோகனி பலகைகளுடன் இருவரை, கட்டுகஸ்தோட்டை, வாசனாகந்த பிரதேசத்தில் வைத்து, செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்துள்ள பொலிஸார், பலகைகளைக் கொண்டு செல்வதற்காக பயன்படுத்திய லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, 75 பலகைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பொல்கொல்லயை சேர்ந்த 34, 38 வயதுடைய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, மேற்படி வீதியில் பயணித்த லொறியை வழிமறித்து சோதனை செய்த பொலிஸார், அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட மஹோகனி பலகைகளை கைப்பற்றியுள்ளதுடன், இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .