Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்,டி. சந்ரு
நுவரெலியா -மாகஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் நேற்று (27) சனிக்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (28) காலை 6 மணிக்கு திறக்கும் பொழுது சுவாமியின் மூலஸ்தானம் திறந்திருந்துள்ளது.
அதனை தொடர்ந்து ஆலய நிர்வாக சபையினரும் தோட்ட பொது மக்களும் ஆலயத்தினுள் சென்று பார்த்த பொழுது, ஆலயத்தின் தெற்குவாசல் கதவு கண்ணாடி உடைக்கப்பட்டு கதவை திறந்து உள் நுழைந்த ததிருடர்கள் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களையும் ஆலய ஒலிபெறுக்கி உபகரணங்கள் மற்றும் ஆலய உண்டியலையும் திருடி சென்றுள்ளார்கள்.
திருடப்பட்ட உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.
நுவரெலியா பொலிஸார் மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் . சந்தேகத்தின் பெயரில் 6 பேரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
18 May 2025