Editorial / 2019 ஜூலை 26 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை நகர், பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றின் மாடியிலிருந்துத் தவறி விழுந்தப் பெண்ணொருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று(25) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், இராகலையைச் சேர்ந்த சமந்தி திஸாநாயக்கா (வயது 42) என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண், காலிடறி கீழே விழுந்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில், இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago