2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாடியில் இருந்து கீழே விழுந்து சா/த மாணவன் பலி

Editorial   / 2023 மே 23 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

மடுகஸ்தலாவ,  ரபர்வத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவர்  மெதவெலகமவில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதற்காக சென்றிருந்த போது, மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.  

மேல் மாடியில் படுத்துக் கொண்டு இருந்த போது, சிறுநீர் கழிப்பதற்காக,  திங்கட்கிழமை (22) இரவு 10 மணியளவில் எழுந்து சென்றபோது,மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

அவரை பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  பதுளை பொது  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி  புதன்கிழமை (23) காலை 6.30 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த மாணவன் பசறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இம்முறை தரம் 11ல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X