Editorial / 2023 நவம்பர் 08 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், நான்காம் தரத்தில் கல்விப் பயிலும் ஒன்பது வயதான மாணவன் ஒருவனை, தடியால் தாக்கிய ஆசிரியை, புதன்கிழமை (08) காலை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவன், பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
திங்கட்கிழமை (06) ஆங்கில பாடம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, இரு மாணவர்கள் கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போதே மேற்படி மாணவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் வலது கை மற்றும் உடம்பின் பின் பகுதியில் பிரம்பால் அடித்தமைக்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், கல்வி அமைச்சு, மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் செயலாளர், ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு சிறுவனின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
22 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
51 minute ago
2 hours ago