2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற பயிற்றுவிப்பாளர் கைது

Kogilavani   / 2021 ஜனவரி 27 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன 

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, ஈஷிகேஸ் முறையில் கஞ்சா விற்றுவந்த மாத்தளையிலுள்ள பிரதான பாடசாலையின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் ஒருவரை, மாத்தளை பொலிஸார், இன்று (27) பகல் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி நபர் மாணவர்கள் இருவருக்கு கஞ்சா விற்பதற்காக 10,000 ரூபாய் பணத்தை ஈஷிகேஷ் முறையில் பெற்றுக்கொண்டுள்ளதுடன் கஞ்சாவை மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதன்போது மேற்படி நபரிடமிருந்து 1476 மில்லிகிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

மேற்படிப் பயிற்றுவிப்பாளர் மிக நீண்டகாலமாக மிகவும் சூட்சுமுமான முறையில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மேற்படி நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X