2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணிக்கக்கல் அகழ்ந்த பிரதேசசபை உறுப்பினர் கைது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

பொகவந்தலாவை- மஹாஎலிய வனப்பகுதியில்  சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல்  அகழ்ந்த குற்றச்சாட்டில் பிரதேசசபை  உறுப்பினர்  உள்ளிட்ட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோர்வூட் பிரதேசசபையின்  உறுப்பினர் உள்ளிட்ட  நால்வர், இன்று (27) அதிகாலை  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹோர்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மஹாஎலிய  வனப்பகுதியில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்களை கைதுசெய்யும் போது, குறித்த வனப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில்  ஈடுபட்டிருந்த மற்றுமொரு குழுவினர் அங்கிருந்து   தப்பிச் சென்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று (27) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X