2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

Janu   / 2024 டிசெம்பர் 11 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் , மாணிக்ககல் அகழ்வதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹட்டன் - டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சிலர் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஹட்டன் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்தினபுரி, கஹவத்தை, பலாங்கொடை, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25-40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.கணேசன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X