Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா
பொகவந்தலாவ டின்சின் விவசாயப் பண்ணைக்கு அருகில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை, பொகவந்தலாவ பொலிஸார் இன்று (14) காலை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, மேற்படிப் பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, மேற்படி நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
43 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago