Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Janu / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் தோட்டத்தின் கீழ்பிரிவு, தேயிலை தோட்டத்தில் பெரிய குழிகளை தோண்டி தோண்டியதால், அத்தோட்டத்தில் பணிபுரிவது ஆபத்தானது என அத்தோட்ட தோட்டத்தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை (29) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நோர்வூட் பொது மயானம் மற்றும் சுடுகாடு செல்லும் வீதியின் இருபுறங்களும் தேயிலை தோட்டத்தில் தேயிலைச் செடிகளுக்கு அடியில் பாரிய குழிகளை தோண்டி மாணிக்க கற்கள் செறிந்த மண்ணை அள்ளிச் சென்றுள்ளனர்
நோர்வூட் பிரதேசத்தில் மாணிக்கக்கல் அகழும் கும்பல் ஒன்று இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருவதாகவும், தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் வீதியில் உள்ள பெரும் பள்ளங்களை தோண்டி செழிப்பான மண்ணை எடுத்துச் சென்றுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தமது தேயிலைத் தோட்டத்தில் அனுமதியின்றி மாணிக்கக் கற்கள் அகழ்வதைத் தடுக்க நோர்வூட் பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த நோர்வூட் பொலிஸார், அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வதை தடுத்து, கடத்தல்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டத் தொழிலாளர்களிடம் கூறியதையடுத்து, தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் பணி செய்யாமல் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago