Kogilavani / 2021 மே 10 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, மாதாந்தம் 10ஆம் திகதி வேதனம் வழங்கப்படுகின்றன நிலையில், மஸ்கெலிய பிரதேச சபைக்கு உட்பட்ட பல தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தமக்கான வேதனத்தை வழங்க மறுத்து, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் சுமார் 20 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் என்று, தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் எனினும் 20 கிலோகிராம் பறிக்காத தொழிலாளர்களுக்கு, 1000 ரூபாய் சம்பளத்தை வழங்காது, கொழுந்தின் நிறைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் தொழிற்சங்கங்களுக்கான சந்தாப் பணம் அறவிடப்படவில்லை என்றும் கைக்காசு தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago