2026 மே 06, புதன்கிழமை

மாத்தளை மாவட்டத்தில் 1,067 பேர் சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ்கீர்த்தி ரத்ன

மாத்தளை மாவட்டத்தில், 1,067 பேர் இதுவரை சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 814 பேர், 14 நாள்களைக் கடந்துவிட்டனர் என்றும் சுகாதார அமைச்சின் மாத்தளை மாவட்ட தொற்றுநோயியல் பிரிவின் இயக்குநர் டொக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவின் தலைமையில், மாவட்டச் செயலகத்தில், இன்று(1) காலை இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது மேலும் கூறிய அவர், நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து மாத்தளைக்கு வந்தவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பை பேணியவர்களே, சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தற்போதைய நிலையில், 253 பேர் சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .