2025 ஜூலை 16, புதன்கிழமை

மாத்தளையில் ’மாவா’ மூவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விராஜ் அபயசிறி

 

மாத்தளை நகரில் சுற்றிவளைக்கப்பட்ட தேடுதலின் போது, மா​வா என்றழைக்கப்படும் போதைப்பொருள்களுடன் மூவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மபால மாவத்தை, ரோஸ் வீதி மற்றும் நுஹமுல பஸ் நிறுத்துமிடம் போன்ற பகுதிகளிலிலேயே இந்த சுற்றிவளைப்பு தேடுதல், நேற்று (05) மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் உள்ள சந்தேகத்துக்கிடமான வர்த்த நிலையங்களை சோதனைக்கு உட்படுத்திய போது, மாவா ​பக்கெற்றுகள் 300, 20 கிலோகிராம் புகையிலை, 25 கிலோகிராம் பாக்கு மற்றும் போதைப்பொருட்கள் அடங்கிய ரின்கள்-8 என்பனவும் கைப்பற்றப்பட்டன என்று, மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களையும், மாவா போதைப்பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .