Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வாஹிட் குத்தூஸ்
நமுனுகுல என்.எஸ் விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாபெரும் கரப்பந்தாட்டத் தொடரும் விசேட நிகழ்வுகளும், நமுனுகுல பொது விளையாட்டு மைதானத்தில், எதிர்வரும் 28, 29, 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இக்கரப்பந்தாட்டத் தொடரில் வெற்றிபெறும் ஆண்கள் அணிக்கு, முதற் பரிசாக 70 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும்.
அத்துடன், சம்பியன் ஆகும் பெண்கள் அணிக்கு, முதற்பரிசாக 30 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படவுள்ளதென, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், 077-8111521 (மலர்வேந்தன்), 076-5548513 (மஹாராஜன்) ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025