R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
இந்த மாதம் 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமியொருவர் காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இச்சிறுமியுடன் மேலும் இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58 வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் குறித்த சிறுமியும் உடகிருவ- கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, இன்று காலை விஷேட அதிரடி படையினர் மற்றும் லுணுகலை பொலிஸார் இனைந்து உடகிருவ காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட போது, குறித்த மூவரும் கற்குகை ஒன்றினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026