Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், மாவத்தகம பிரதேசத்துக்கு வருகைதந்துள்ளதால், அவருட் சேர்த்து அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அக்குறணை குருகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், மாவத்தகம பிரதேசத்திலுள்ள
சிங்கபிட்டிய என்ற இடத்தில் திருமணம் செய்துள்ளார்.
அவரது மனைவி, பின்ளைகள் சிங்கபிட்டிய பகுதியில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் அவர் அக்குறணையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரின் அனுமதியுடன் அவர் தமது மாவத்தகம வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய சுகாதார அதிகாரிகள் அங்குச் சென்று அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், முழுக் குடும்பத்தையும் சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரி லங்கா அமரசிங்க, மாவத்தகம பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் மேற்படி உத்தரவை வழங்கியுள்ளனர்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago