2025 ஜூலை 16, புதன்கிழமை

மாவுடன் இருவர் கைது

Kogilavani   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை நகரில், மாவுடன் இருவரை ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து 200 மாவா பொதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, இவ் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாத்தளை நகரிலுள்ள பல வர்த்தக நிலையங்களில், மாவா போதை பொருள் மிகவும் இரகசியமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய, ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .