2025 மே 19, திங்கட்கிழமை

மாவெளி வனப்பகுதியில் பத்து பேர் கைது

Freelancer   / 2022 செப்டெம்பர் 23 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்

பொகவந்தலாவ ராணிகாடு மாவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த பத்து பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பத்து பேரும் பொகவந்தலாவ, ரானிகாடு, லின்போட்.லொய்னோன், பலாங்கொடை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X