Editorial / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நானுஓயா, கார்லபேக் தோட்டத்தில், நேற்று (06) மாலை 3 மணியளவில் ஏற்பட்டுள்ள மினி சூறாவளி காரணமாக, ஒன்பது வீடுகளின் கூரைத்தகரங்கள், காற்றில் அள்ளுண்டுச் சென்றுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட 58 பேர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், கார்லபேக் தோட்ட நிர்வாகம், அப்பகுதிக்கான கிராமசேவகரினூடாக, நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அறிவித்ததைத் தெரிவித்து, மேற்படி வீடுகளுக்கு, கூரைத்தகரங்கள் பொருத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மினி சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அவர்களின் சொந்த வீடுகளில் குடியமர்த்துவதற்கான கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரி அர்.எம்.பண்டார தெரிவித்தார்.
24 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
46 minute ago
1 hours ago