Janu / 2024 மே 22 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று,பலத்த மழையூடான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் பல பிரதேசங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, மற்றும் அம்பகமு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தொடர்ச்சியான மழையும்,பலத்த காற்றும் வீசுகிறது.
இதன் காரணமாக வலப்பனை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (21) முதல் இரண்டு நாட்களாக வீசும் கடும் காற்றினால் வலப்பனை ரூபஹா, மற்றும் தெரிப்பெயே ஆகிய பிரதேசங்களில் வீதி ஓரங்களில் காணப்படும் பாரிய மரங்கள் மின்சார இணைப்பு வயர்கள் மீது சரிந்தும்,முறிந்தும் வீழ்ந்து மின் கம்பங்களும் உடைந்துள்ள நிலையில் இப் பிரதேசத்திற்கான மின் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
ஆ.ரமேஸ்

3 minute ago
16 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
31 minute ago
32 minute ago