2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி இருவர் பலி

Kogilavani   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக், எம்.பூவேந்தன்  

கண்டி, வத்துகாமம் மற்றும் பண்டாரவளை பூணாகலை ஆகிய பகுதிகளில், 48, 73 வயதுடைய இருவர்,  மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, உடுராவணை பிரதேசத்தில்  காட்டுப் பன்றிகளிடம் இருந்து, மரக்கறித் தோட்டத்தை  பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, உடுராவண பிரதேசத்தை சேர்ந்த ஈ.எம்.குலரத்ன என்பவர், நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலம், பண்டாரவளை,  பூணாகல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை    மின்சாரம் தாக்கி 48 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், தனது வீட்டுக்கு அருகிலுள்ள மாட்டுக் கொட்டிலில்    பொருத்தப்பட்டிருந்த மின்குமிழை ஒளிரச்செய்வதற்காக,  மின் ஆழியை அழுத்தும்போதே,  இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவரின் சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .