2025 ஜூலை 26, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

Kogilavani   / 2017 ஜூலை 27 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

தூரியன் பலத்தை, திருடர்களிடமிருந்து பதுகாப்பதற்காக போடப்படிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு,  பொல்பிட்டிய, ஹிட்டிகேகம புலத்தவத்த பிரதேசத்தைச் சேர்ந்த  வை.குலரத்ன ( வயது 62) என்பவர், இன்றுக் காலை உயிரிழந்துள்ளதாக, கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு பலியாகியுள்ளார்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர், தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள தூரியன் பழங்களை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக, தோட்டமுழுவதும் மின்சார வேலியமைத்துள்ளார். இதனை அறிந்திராத மேற்படி நபர், தனது வீட்டுக்கு குடிநீர் வராததால், நீர்குழாயை திருத்துவதற்காக,  தனது வீட்டுக்கு அருகிலுள்ள மேற்படி தோட்டத்துக்குச் சென்ற போதே,  மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக கினிகத்தேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மின்சார வேலியமைத்த குற்றத்துக்காக தோட்டத்தின் உரிமையாளரை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X